மரங்களை வெட்டிய நபர்கள் மீதுநடவடிக்கை எடுக்க கோரி மனு


மரங்களை வெட்டிய நபர்கள் மீதுநடவடிக்கை எடுக்க கோரி மனு


அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, தொக்குப்பட்டி புதுார் பகுதியில் வாழை, கொய்யா மரங்களை வெட்டி சேதப்படுத்தியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி அருகே தொக்குப்பட்டி புதுார் பகுதியில், 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் அமராவதி ஆறு கடப்பதால் வாழை, மஞ்சள், முருங்கை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். தொக்குப்பட்டியை சேர்ந்த ரவி, இப்பகுதியில் 2.50 ஏக்கர் விவசாய நிலத்தில் வாழை, கொய்யா, பருத்தி உள்ளிட்டவைகளை விவசாயம் செய்து வருகிறார். கடந்த, 22ம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள், இவரது தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து, 120 வாழை மரங்கள், கொய்யா மரங்களை வெட்டி விட்டு, ஆயில் மோட்டாரை தீயிட்டு எரித்து விட்டதாகவும் இதனுடைய மதிப்பு, 42 ஆயிரம் ரூபாய் என தெரிகிறது. இது குறித்து சின்னதாராபுரம் போலீஸ் ஸ்டேஷனில், ரவி புகார் மனு அளித்துள்ளார்.

*****************

Advertisement