மாணவிக்கு தொல்லை ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

பெரியபட்டினம்:ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் ராம் பிரகாஷ் 36. இவர் மாணவி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம் மற்றும் அனைத்து மகளிர் போலீசாரிடம் பெற்றோர் புகார் அளித்ததால் ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஆசிரியர் ராம் பிரகாைஷ மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராஜூ 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

Advertisement