4 போலீசாருக்கு மத்திய அரசு பதக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் தண்டனை ஏதுமின்றி பணியாற்றிய 4 போலீசாருக்கு மத்திய அரசின் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் கடந்த 25 மற்றும் 15 ஆண்டுகள் பணியின் போது, தண்டனையின்றி சிறப்பாக பணியாற்றிய 4 பேருக்கு மத்திய அரசின் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 2020-21ம் ஆண்டிற்கான 'ஆட்டி யுத்கிரிஷ்த் சேவா பதாக்' என்ற பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பதக்கத்தை ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, ஆயுதப்படை தலைமைக் காவலர் அசோக்குமார் ஆகியோருக்கு நேற்று விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்.பி., சரவணன் பதக்கங்களை அணிவித்து பாராட்டினார்.

Advertisement