மயானக்கொள்ளை ஊர்வலத்தில் கட்சி கொடிகளுக்கு தடை சப் கலெக்டர் கூட்டத்தில் முடிவு

திண்டிவனம்: திண்டிவனத்தில் நடைபெற உள்ள மயானக்கொள்ளை ஊர்வலத்தில் அரசியல் கட்சி கொடிகளை எடுத்து வரக்கூடாது என சப் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம், செஞ்சி சாலையில் உள்ள அங்காளம்மன் கோவிலில், நாளை 27ம் தேதி மயானக் கொள்ளை திருவிழா நடக்கிறது.
இதையொட்டி சட்டம் - ஒழுங்கு தொடர்பான முன்னெச்சரிக்கை கூட்டம் திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம் தலை மையில் நேற்று நடந்தது.
தாசில்தார் சிவா, டி.எஸ்.பி., பிரகாஷ், இன்ஸ் பெக்டர் விஜயகுமார், அறங்காவலர் குழுவினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மயானக்கொள்ளை ஊர்வலத்தின் போது பூ மாலைகளை மின்கம்பிகள் மீது வீசக்கூடாது, இரும்பு லோகத்தால் செய்யப்பட்ட சூலம், கத்தி, வேல் உள்ளிட்டவை களை எடுத்து வரக்கூடாது.
அரசியல் கட்சிகளின் கொடிகளை எடுத்து வரக்கூடாது. ஊர்வலத்தில் வருபவர்கள் மது அருந்திவிட்டு சாமியாடக் கூடாது. மயானக் கொள்ளை ஊர்வலம் மாலை 5:30 மணிக்குள் காந்தி சிலை அருகே முடித்துக்கொள்ள வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
மேலும்
-
இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு