மரகதாம்பிகை பள்ளி ஆண்டு விழா

திண்டிவனம்: திண்டிவனம் மரகதாம்பிகை உயர்நிலைப் பள்ளியில் 20ம் ஆண்டு விழா நடந்தது.

சாணக்யா கல்விக் குழும தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வேல் முருகன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ராஜவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்கள் கவுன்சிலர்கள் ேஹமமாலினி ஜெயராஜ், லட்சுமி பிரபா, தி.மு.க., பிரமுகர் பரணிதரன் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினர்.

துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

Advertisement