வி.சி., கட்சி செயற்குழு கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட வி.சி., செயற்குழு கூட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர்கள் பெரியார், விடுதலை செல்வன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., தலைமை நிலைய செயலாளர் பாவரசு, தேர்தல் பணிக்குழு செயலாளர் குணவழகன் சிறப்புரையாற்றினர்.

மாவட்ட பொருளாளர் பிரின்ஸ் சோமு, செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, ஒன்றிய செயலாளர்கள் அறிவன் ஆசைத்தம்பி, நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், வரும் மார்ச் 16ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ள வி.சி., தேர்தல் அங்கீகாரம் பெற்றதற்கு திருமாவளவன் எம்.பி.,க்கு பாராட்டு விழா மற்றும் பொதுகூட்டத்தில் நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement