தி.மு.க.வினர் பிரசாரம்

திருவெண்ணெய்நல்லுார்: மும்மொழி கொள்கையை எதிர்த்து தி.மு.க.,வினர் திருவெண்ணெய்நல்லுாரில் துண்டு பிரசுரம் வழங்கினர்.
கடை வீதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினர். பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், துணைச் சேர்மன் ஜோதி முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி இந்தி மொழியை திணிக்காதே, தமிழ் மொழியை நசுக்க நினைக்காதே, இருமொழிக் கொள்கையை நமது கொள்கை, மும்மொழி திட்டம் தேவையில்லை என வாசகங்கள் உள்ளடக்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.
ஒன்றிய சேர்மன் ஓம் சிவ சக்திவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட பிரதிநிதிகள் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
விக்கிரவாண்டி
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் விக்கிரவாண்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கி ,மத்திய அரசின் மும்மொழி கொள்கையை எதிர்த்தும், இந்தி திணிப்பை கண்டித்தும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க கோரியும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினார்.
அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி, நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, ஜெயபால்,ஒன்றிய தலைவர் முரளி, நகர செயலாளர் நைனாமுகமது உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு