ரோஷணை காவல் நிலையத்தில் சி.சி.டி.வி., கட்டுப்பாட்டு அறை எஸ்.பி., சரவணன் துவக்கி வைப்பு 

திண்டிவனம்: திண்டிவனம் அருகே குற்ற சம்பவங்களைக் கண்டறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி., கட்டுப்பாட்டு அறையை எஸ்.பி., துவக்கி வைத்தார்.

திண்டிவனம், ரோஷணை போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளான, சென்னை சாலையில் சலவாதி கூட்ரோடு, சிப்காட் சந்திப்பு, சந்தைமேடு கூட்ரோடு, செஞ்சி ரோடு ஆர்யாஸ் ஓட்டல் அருகே என 5 இடங்களில், வெண்மணியாத்துாரில் உள்ள சிப்காட் ஷூ கம்பெனி சார்பில் 8.82 லட்சம் ரூபாய் செலவில், சி.சி.டி.வி., பொறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான கட்டுப்பாட்டு அறை ரோஷணை காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையை, எஸ்.பி., சரவணன் நேற்று காலை துவக்கி வைத்தார்.

திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., பிரகாஷ், சிப்காட் ஷூ கம்பெனி நிர்வாகிகள் தீபலட்சுமி, முத்துவேல், டேவிட், ரோஷணை இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement