இன்று மஹா சிவராத்திரி விழா; சிவாலயங்களில் கோலாகலம்

திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், இன்று மஹா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.

மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, இன்று மாலை துவங்கி நாளை அதிகாலை வரை, சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மாலை, 6:00 மணி, இரவு, 9:00 மணி, நள்ளிரவு , 12:00 மணி, அதிகாலை, 4:00 மணி என, நான்குகால அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்க உள்ளன.

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், அலகுமலை ஆதிகைலாச நாதர் கோவில், உட்பட, அனைத்து சிவாலயங்களிலும் மஹா சிவராத்திரி விழா, சிவ வழிபாடு, பரதநாட்டிய கலைவிழா என கோலாகலமாக நடக்கிறது.

Advertisement