அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்': மக்களுக்கு பெரும் பாதிப்பு

திருப்பூர்; ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதனால், தாலுகா அலுவலகங்களுக்கு பல்வேறு பணி நிமித்தமாக வந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ--ஜியோ) சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம், அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது, சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஒப்பந்த ஊழியர்களை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வருவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திரளான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், பாலசுப்ரமணியன், ரமணி, வேலுமணி, சந்திரசேகரன், கர்னல் உள்ளிட்ட பலர் ஒருங்கிணைத்தனர்.

அலுவலகங்கள்'வெறிச்சோடின'



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்த நிலையில், பல அரசு அலுவலகங்கள் வெறிச் சோடியிருந்தன. அரசுத்துறை சார்ந்த பணிகள் பாதித்தன. வெயிலையும் பொருட்படுத்தாமல், அரசு ஊழியர்கள் நீண்ட நேரம் கலெக்டர் அலுவலக வளாக முகப்பு ரோட்டில் அமர்ந்திருந்தனர். பெண் ஊழியர்கள் சிலர் குடை பிடித்தபடி அமர்ந்திருந்தனர்.

Advertisement