மகளிர் குழுவினருக்கு விழிப்புணர்வு

திருப்பூர்; மூலனுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், நுகர்வோர் உரிமை குறித்து விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மகளிர் குழுவினருக்கு நடத்தப்பட்டது.

தாராபுரம் வட்ட வழங்கல் அலுவலர் செந்தில் பிரபு, ஆர்.ஐ., நந்தகுமார், பி.டி.ஓ., ஸ்ரீதர் மற்றும் வெங்கடேசன், உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன், வித்யா முன்னிலை வகித்தனர். எஸ்.ஐ., சண்முக சுந்தரம் சைபர் குற்றம் குறித்தும், தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசாமி தீ தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, தீயினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் பேசினர்.

உணவு பாதுகாப்பு அலுவலர் ரகுநாதன், அயோடின் தேவை மற்றும் அவசியம்; கலப்பட உணவு பொருட்கள் கண்டறியு் முறை குறித்து விளக்கினார். நல்லுார் நுகர்வோர் நல மன்ற செயலாளர் வேல்முருகன், தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேசன் துணை செயலாளர் அன்பழகன் ஆகியோர் நுகர்வோர் பாதுகாப்புசட்டம் குறித்து பேசினர்.

Advertisement