முகமூடி கும்பல் 9 பேர் கைது; அரிவாள்-பட்டாகத்தி பறிமுதல்
திருப்பூர்; திருப்பூர் மாநகரில் பழைய வழக்குகளில் தொடர்புடையவர்களை தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சென்ட்ரல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆண்டிபாளையம் - மங்கலம் ரோட்டில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, குற்றத்தில் ஈடுபட திட்டமிட்டு காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பது குறித்து தெரிந்தது.
கண்காணித்த போலீசார், கருப்பு துணியால் முகத்தை மூடிய நிலையில், கைகளில் அரிவாள், இரும்பு கம்பி, கட்டைகளுடன் இருந்த, ஆறு பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில், கருவம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 22, பாலாஜி நகரை சேர்ந்த மணிகண்டன், 23, வீரபாண்டியை சேர்ந்த கவுதம், 23, சலவை பட்டறையை சேர்ந்த ரகுராம், 20, ஜெயராம், 26 மற்றும் சூர்யபிரகாஷ், 23 என்பது தெரிந்தது. ஆறு பேரும், வழிப்பறி கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டது தெரிந்தது. ஆறு பேரையும் கைது செய்தனர்.
தலை துண்டித்து கொலை வழக்கு
அதேபோல், கொலை உள்ளிட்ட பல வழக்கில் தொடர்புடைய திருமுருகன்பூண்டியை சேர்ந்த ராம்குமார், 28, காலேஜ் ரோட்டை சேர்ந்த பாலாஜி சரவணன், 28 மற்றும் அய்யம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 28 என, மூன்று பேரை நல்லுார் போலீசார் கைது செய்தனர்.
கடந்த, மூன்று ஆண்டுக்கு முன், போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்களுடன் சேர்ந்து வாலிபரை தலையை துண்டித்து கொலை செய்த வழக்கு உட்பட ஏராளமான வழக்கு உள்ளது. மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதோடு, போலீஸ் கண்காணிப்பில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!