இளைஞர் அணி செயலாளர் யார்? தி.மு.க.,வில் அடுத்த பரபரப்பு

திருப்பூர் ; தி.மு.க.,வில் மாவட்ட அளவிலான கட்சி நிர்வாக அமைப்பில் சில மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டன.

அதில், மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சாமிநாதனும், வடக்கு மாவட்ட செயலாளராக மேயர் தினேஷ்குமாரும் நியமிக்கப்பட்டனர். இதில், மேயர் தினேஷ்குமார் தி.மு.க.,வின் வடக்கு நகர செயலாளராக பொறுப்பு வகித்தவர். அவர் வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதால், வடக்கு நகர செயலாளர் பதவி காலியானது.

துணை முதல்வர் உதயநிதியின் பரிந்துரையால், வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளராக இருந்த தங்கராஜ் நகர செயலாளர் பொறுப்பு கிடைத்தது. இதனால், அவர் வகித்த வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பதவி தற்போது காலியானது.

இப்பதவிக்கு, வடக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் திலகராஜ், வடக்கு நகர இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், தெற்கு செயலாளர் ராஜூ, அவிநாசி ஒன்றிய இளைஞர் அணியைச் சேர்ந்த அவிநாசி ரமேஷ் ஆகியோர் மாவட்ட இளைஞர் அணி பதவியைப் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவர்களில் இளைஞர் அணி யெலாளர் பதவியை யார் பெறப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Advertisement