காலி பணியிடம் நிரப்ப மின் ஊழியர் போராட்டம்

திருப்பூர்; ஆரம்ப கட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 'ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை புகுத்தாமல், சம்பள உயர்வு பேச்சுவார்த்தை விரைந்து துவக்க வேண்டும்.

பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 2019 டிச., முதல், 2023 மே 15 ம்தேதி வரை பணியில் சேர்ந்த ஊழியருக்கு,6 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும்என்பது உட்பட பல கோரிக்கையை வலியுறுத்தி, மாநில அளவிலான தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.

மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.,) சார்பில், குமார்நகர் செயற்பொறியாளர் அலுவலக வளாகம் முன், நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.

Advertisement