'ஆன்லைனில்' போதை மாத்திரை: 3 பேர் கைது

திருப்பூர்; 'ஆன்லைனில்' போதை மாத்திரை ஆர்டர் செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், காந்திநகர், பத்மாவதிபுரத்தை சேர்ந்த விஜய், 22, அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையத்தை சேர்ந்த தினகரன், 19, நந்தகுமார், 20. திருப்பூரிலுள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த நண்பர்கள் மூவரும், ஆன்லைனில் 200 வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக ஆர்டர் செய்துள்ளனர். டில்லியிலிருந்து திருப்பூருக்கு கூரியரில் வந்த மாத்திரைகளை, 15 வேலம்பாளையம் போலீசார் கைப்பற்றி, மூவரையும் கைது செய்தனர். போதை மாத்திரைகளை கரைத்து, ஊசிமூலம் உடலில் செலுத்தி போதையேற்றி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

Advertisement