சதுரங்க போட்டியில் மாணவர்கள் அபாரம்

திருப்பூர்; திருப்பூர், காங்கயம் ரோடு, விஜயாபுரம் பிரிவு, பிரைட் மெட்ரிக் பள்ளியில், மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. இதில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில், 9 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில், முதல் பரிசு தமிழ் இன்பக்குமரன், இரண்டாம் பரிசு யுவன் வினய், மூன்றாம் பரிசு மித்துன் ஆகியோர் பெற்றனர். மாணவியர் பிரிவில், எம்.எஸ்., வித்யாலயா பள்ளி மாணவி பிரித்விகா, முதல் பரிசு; கே.எம்.எஸ்., பள்ளி மாணவி லட்சுமி தேவி, இரண்டாம் பரிசு; வித்யாசாகர் பள்ளி மாணவர் சிவநேத்ரா மூன்றாம் பரிசு பெற்றனர்.

அதில், 12 வயது மாணவர் பிரிவில், விகாஸ் வித்யாலயா மாணவர் தேவதருண் விகாஸ், முதல் பரிசு; தருண் கார்த்திகேயன் இரண்டாம் பரிசு; ரோஹித் ஜெய்சிங் மூன்றாம் பரிசு பெற்றனர். மாணவியர் பிரிவில், பைன்செஸ் அகாடமி மாணவி ஸ்வேதா முதல் பரிசு, சென்சுரி பள்ளி மாணவி பிரதிக்ஷா, இரண்டாம் பரிசு, உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மாலதி, மூன்றாம் பரிசு பெற்றனர்.

பதினாறு வயது பிரிவில் ஆகாஷ், ஸ்ரீயாஸ், விஷால் ஆகியோரும்; மாணவியர் பிரிவில் சவுபர்ணிகா, ஸ்ருதிசிங், யாஷிகா ஆகியோர் மூன்றாவது இடம் பெற்றனர். பொது பிரிவில் செந்தில்குமார், முகமது அரீப் மற்றும் விசாகன் ஆகியோர் முதல் மூன்றிடம் பெற்றனர். சிறப்பு விருந்தினர்கள் ராஜேந்திரன், பாரதிராஜா ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.

Advertisement