அங்காளம்மன் கோவில் குண்டம் விழா துவக்கம்

பவ்லடம்; பல்லடத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில், நடப்பு ஆண்டு குண்டம் விழா, நேற்று முன்தினம், விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தியுடன் துவங்கியது.

விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 7.00 மணிக்கு கொடியேற்ற விழா நடந்தது.இரவு, யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், உற்சவ மூர்த்தியாக எழுந்தருளிய அங்காளம்மன், கோவிலை சுற்றி வலமாக வந்தார்.

இதனை தொடர்ந்து, யாகசாலை பூஜை துவங்கியது. இரவு, 10.00 மணிக்கு முகப்பள்ளம் மயான பூஜை நடந்தது. இன்று இரவு, 7.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், நாளை காலை, 7.00 மணிக்கு நேர்ந்து கொண்ட குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Advertisement