ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவை வந்தார் அமித்ஷா

கோவை; ஈஷா சார்பில் நடக்கும், மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றிரவு 8:40 மணிக்கு, விமானத்தில் கோவை வந்தடைந்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பா.ஜ., மேலிட பார்வையாளர் சுதாகர் ரெட்டி, மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன், தேசிய செயலாளர் எச். ராஜா, எம்.எல்.ஏ.,க்கள் காந்தி, நயினர் நாகேந்திரன், சரஸ்வதி, வானதி சீனிவாசன், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட அமித்ஷாவுக்கு, பா.ஜ., தொண்டர்கள் மலர் துாவி, உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்று காலை பீளமேடு பகுதியில், புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜ., அலுவலகத்தை திறந்து வைக்கிறார். மதியம், பா.ஜ., நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
மாலை, சாலை மார்க்கமாக ஈஷா யோகா மையத்தை சென்றடைகிறார். இரவு ஈஷா மையத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார்.
நாளை காலை, ஈஷாவில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் உத்தர பிரசேம் செல்கிறார்.
போலீஸ் பாதுகாப்பு
அமித்ஷா வருகையையொட்டி, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரில் 3,000 போலீசார், மாவட்ட பகுதியில், 4,000 போலீசார் என மொத்தம் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும்
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!