மனைவியிடம் தகராறு கணவர் தற்கொலை

காரைக்கால்,: மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால், கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்கால், நெடுங்காடு, மேலகாசாகுடி, தென்பாதி பள்ளத்தெருவை சேர்ந் தவர் அருமைத்தம்பி, 40.

இவர் மீன் பிடித்துறைமுகத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹலன்மேரி. இவர் பல குழுக்களில் லோன் வாங்கியுள்ளார். இதனால் கணவன், மனைவி இடையோ பிரச்னை ஏற்பட்டது.

இதனால், ஹலன்மேரி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றார். மனைவி சென்ற வேதனையில் அருமைத்தம்பி நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

புகாரின் பேரில், நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement