சிவன் கோவில்களில் இன்று சிவராத்திரி

புதுச்சேரி: மகா சிவராத்திரியை முன்னிட்டு, புதுச்சேரி சிவன் கோவில்களில், இன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவில், கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோவில், வில்லியனுார், திருக்காஞ்சி ஆகிய சிவன் கோவில்களில், இன்று மாலை முதல் நள்ளிரவு மற்றும் அதிகாலை வரை சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

தவளக்குப்பம், அயிற்றுார் மகாதேவர் சிவன் கோவில், நாணமேடு ஜலகண்டேஸ்வரர் சிவன் கோவில்களில், மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

Advertisement