சொந்த ஊரில் போட்டியிட தயாரா? நாராயணசாமிக்கு சபாநாயகர் சவால்

புதுச்சேரி: முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அவரது சொந்த ஊரான மணவெளி தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா என, சபாநாயகர் செல்வம் சவால் விடுத்துள்ளார்.

அவர், கூறியதாவது:

தானாம்பாளையம் பள்ளி சிறுமி பாலியல் வழக்கில், மாநில போலீஸ் மீது நம்பிக்கையில்லை என்றால், கவர்னர், முதல்வருடன் பேசி, வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற எந்த தடையும் இல்லை.

புதுச்சேரியில் 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியே இருப்பார். விஜய் கட்சியுடன் கூட்டணியா? என்பதை, எங்கள் தேசிய தலைமை முடிவு செய்யும் என சபாநாயகர் கூறினார்.

மாஜி முதல்வர் நாராயணசாமி, காங்., செயற்குழு கூட்டத்தில், நான் டிபாசிட் வாங்க மாட்டேன் என பேசியுள்ளார். அவருக்கு தைரியம் இருந்தால், அவரது சொந்த ஊரான மணவெளி தொகுதியில், என்னை எதிர்த்து போட்டியிடட்டும். யாருக்கு டிபாசிட் போகிறது என்பதை பார்க்கலாம்.

கடந்த ஆட்சியில் ரூ.11.50 கோடி செலவில், பூரணாங்குப்பம் முதல் புதுக்குப்பம் வரை அமைத்த புதைவட மின் கேபிள் திட்டம் இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை.

இத்திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது என, கடந்த சட்டசபை கூட்டத்தில் புகார் தெரிவித்து, சி.பி.ஐ.,க்கு அனுப்ப கூறினேன். அந்த கோப்பு முதல்வரிடம் உள்ளது. கடந்த ஆட்சியில், நாராயணசாமி சார்ந்த கட்சி எம்.எல்.ஏ., மின் கேபிள் திட்டத்திற்கு, பணம் வாங்கியதை நிருபிக்க தயாராக உள்ளோம்.

முதல்வர் ஒப்புக்கொண்டால், இந்த ஊழல் புகாரை சி.பி.ஐ.,க்கு பரிந்துரைக்க தயாராக உள்ளேன்.

வைத்திலிங்கம் கடந்த முறையும், தற்போதும் எம்.பி.,யாக உள்ளார். புதுச்சேரிக்காக, எத்தனை முறை பார்லிமெண்டில் பேசியுள்ளார்.

நாராயணசாமி முதல்வராக இருந்தபோது, மத்திய அமைச்சர்களை சந்தித்து, புதுச்சேரிக்கு நிதி தாருங்கள் என கேட்டு, பூஜ்யமானது போல், இப்போதும் மாய பிம்பத்தை ஏற்படுத்துகிறார்.

புதுப்பிக்கப்பட்ட புதுச்சேரி புதிய பஸ் நிலையம், அண்ணா திடல் ஆகியவை, மார்ச் மாதத்திற்குள் திறக்கப்படும்.

இவ்வாறு சபாநாயகர் கூறினார்.

Advertisement