வணிகர் நல வாரியத்திற்கு நிதி கவர்னரிடம் கோரிக்கை மனு

புதுச்சேரி: புதுச்சேரி வணிகர் நல வாரியத்திற்கு அறிவிக்கப்பட்ட நிதியை வழங்க கோரி வணிகர் கூட்டமைப்பினர் கவர்னரிடம் மனு அளித்தனர்.

புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சேர்மன் சிவசங்கர் எம்.எல்.ஏ., தலைவர் பாபு, பொதுச்செயலாளர் முருகபாண்டியன், துணை தலைவர்கள் வைத்தியநாதன், உமாசங்கர், பாபுசண்முகம், சந்துரு ஆகியோர் நேற்று கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது, புதுச்சேரி வணிகர்நல வாரியத்திற்கு அறிவிக்கப்பட்ட ரூ. 2 கோடி நிதியை வழங்க வேண்டும், வியாபாரிகளுக்கு தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் வழங்குவதுபோல், ஜி.எஸ்.டி., உச்சவரம்பு ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 40 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும், அதனால் புதுச்சேரிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என வலியுறுத்தினர்.

இது தொடர்பாக நிதித்துறை செயலருக்கு பரிந்துரை செய்வதாக கவர்னர் உறுதி அளித்தார்.

Advertisement