பஸ் நிலையத்திற்கு பிரதமர் பெயர் கேட்டு எம்.எல்.ஏ.,க்கள் ஊர்வலம்

புதுச்சேரி: புதிய பஸ் நிலையத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி பெயர் வைக்க கோரி பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் சட்டசபை நோக்கி ஊர்வலம் சென்றனர்.
புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில், நகராட்சி புதிய பஸ் நிலையம் கடந்த 1980ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன்பின்பு 1992ம் ஆண்டு பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து, ராஜிவ் காந்தி பெயர் சூட்டப்பட்டது.
தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ரூ. 29 கோடி செலவில் பஸ் நிலைய வளாகம் இடித்து, வணிக வளாகத்துடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு புதுச்சேரி நகராட்சி ராஜிவ்காந்தி ஒருங்கிணைந்த பொலிவுறு பஸ் முணையம் என, பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
பஸ் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில், பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., சிவசங்கர் ஆகியோர் தலைமையில் ஆதரவாளர்கள் பஸ் நிலையத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி பெயர் சூட்ட வலியுறுத்தி நெல்லித்தோப்பு சிக்னலில் இருந்து ஊர்வலம் சென்றனர்.
மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சென்று ஜென்மராகினி மாதா கோவில் அருகே ஊர்வலம் நிறைவு பெற்றது.
மேலும்
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!