ரூ.1.39 கோடியில் சாலை பணி சபாநாயகர் செல்வம் ஆய்வு

அரியாங்குப்பம்: டி.என்., பாளையத்தில், ரூ.1.39 கோடி மதிப்பில் நடக்கும் சாலை பணியை, சபாநாயகர் செல்வம் ஆய்வு செய்தார்.

மணவெளி தொகுதி, டி.என்.,பாளையம் தார் சாலை, பல ஆண்டுகளாக புதுப்பிக்காமல் குண்டும், குழியுமாக, மெகா பள்ளங்களுடன் இருந்தது. இதனால், பொது மக்கள் அவதியடைந்தனர்.

சாலையை சீரமைக்க வேண்டும் என, தொகுதி எம்.எல்.ஏ.,வான சபாநாயகர் செல்வத்திடம், அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனையடுத்து, சாலை புதுப்பிக்க ரூ.1.39 கோடி, பொதுப்பணித்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடர்ந்து, அபிஷேகப் பாக்கத்தில் இருந்து, டி.என்.,பாளையம் வரை 3.5 கிலோ மீட்டர் தொலைவில், தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அபிஷேகப்பாக்கம் பகுதியில் நடந்த சாலை அமைக்கும் பணியை, நேற்று காலை சபாநாயகர் செல்வம் நேரில் பார்வையிட்டார்.

சாலை தரமாக போடப்படுகிறதா என, பொதுப்பணித்துறை அதிகாரிகளி டம் கேட்டறிந்து, சாலையின் தரம் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

Advertisement