போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் அன்னை ராணி மேல்நிலை பள்ளியில் போதை பொருள் தடுப்பு மற்றும் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

காவல்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.

காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன், போதை பொருட்களின் தீமைகள், அவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துரைத்தார்.

திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், தற்போது அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்கள், மாணவிகளுக்கான பாதுகாப்பு சட்ட பிரிவுகள் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார்.

இதில், சப் இன்ஸ்பெக்டர்கள் லுார்துநாதன், ஜானகிராமன், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement