நுால் வெளியீட்டு விழா

புதுச்சேரி: வி.மணவெளி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை ராஜதிலகம் எழுதிய களஞ்சியம் சிறுகதை தொகுப்பு நுால் வெளியீட்டு விழா உழவர்கரை நகராட்சி திருமண நிலையத்தில் நடந்தது.

மணவெளி தொடக்கப் பள்ளியின் பொறுப்பாசிரியர் கலியபெருமாள் வரவேற்றார். வட்டம் 4 பள்ளித் துணை ஆய்வாளர் அமல்ராஜ் லீமாஸ், சமக்ர சிக் ஷா ஒருங்கிணைப்பாளர் ஹெலன் ராணி, கல்வெட்டு ஆய்வாளர் எத்திராஜ், கல்வியாளர் சாலை செல்வம் ஆகியோர் ஆசிரியர் ராஜதிலகத்தை பாராட்டினர். தொடர்ந்து வட்டம் 4 பள்ளித் துணை ஆய்வாளர் அமல்ராஜ் லீமாஸ் நுாலை வெளியிட புதுச்சேரி கல்வித்துறை சமக்ர சிக் ஷாவின் ஒருங்கிணைப்பாளர் ஹெலன் ராணி பெற்றுக் கொண்டார்.

தொகுப்பாசிரியர் ஆசிரியை ராஜதிலகம் ஏற்புரை வழங்கினார். தமிழ் விரிவுரையாளர் முருகையன் நன்றி கூறினார்.

Advertisement