பாலின விழிப்புணர்வு பிரசாரம் 3.0 நிகழ்ச்சி

நெட்டப்பாக்கம்: அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், வட்டார அளவிலான பாலின விழிப்புணர்வு பிரச்சாரம் 3.0 நிகழ்ச்சி ஏம்பலத்தில் நடந்தது.
வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேயன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமிகாந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி தயானந்தா டெண்டுல்கர், சைபர் கிரைம் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை பாலின நிபுணர் முருகன், வழக்கறிஞர் ரம்யா சசிபாலன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். முன்னதாக பாலின விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பாலின வன்முறைக்கு எதிரான நாடகம் நடந்தது. தொடர்ந்து நடனம், நாடகத்தில் பங்கேற்ற மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!
Advertisement
Advertisement