சாரணர்களுக்கான பயிற்சி முகாம்

புதுச்சேரி: காலாப்பட்டு செவாலியர் செல்லான் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாரணர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.

பள்ளி துணை முதல்வர் வேலாயுதம் தலைமை தாங்கினார். முகாமினை சாரண இயக்கத்தின் முன்னாள் இணை செயலாளர் ராமலிங்கம் துவக்கி வைத்தார். மாநில பயிற்சி ஆணையர் ஆரோக்கியமேரி ஸ்டெல்லா பயிற்சி அளித்தார்.

மாவட்ட பயிற்சி ஆணையர் அய்யப்பன் ஊதல் குறியீடு மற்றும் முடிச்சுப் பயிற்சி அளித்தார். முகாமில் சாரண இயக்கத்தின் குறிக்கோள், அடையாளம், வணக்க முறை, இடது கைகுலுக்கல், உறுதிமொழி, வாக்குறுதி போன்ற அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து காலப்பட்டு கடற்கரையில் துாய்மை பணி நடந்தது. நிறைவு விழாவில் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

முகாமில், தலைமையாசிரியர் மரிய மார்ட்டின், புதுச்சேரி சாரண சாரணிய இயக்கத்தின் மாநில அமைப்பு ஆணையர் சண்முகம், சாரண ஆசிரியர் மனோகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement