முதுநிலை மருத்துவ படிப்புக்கு ஸ்ட்ரே சுற்று வரைவு சீட் ஒதுக்கீடு
புதுச்சேரி: புதுச்சேரியில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான ஸ்ட்ரே சுற்று வரைவு சீட் ஒதுக்கீட்டு பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதுநிலை மருத்துவ படிப்பு (எம்.டி./எம்.எஸ்.) அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கான ஸ்ட்ரே சுற்று வரைவு சீட் ஒதுக்கீடு பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முழு கல்வி கட்டணம் செலுத்தியதன் அடிப்படையில் ஸ்ட்ரே சுற்றுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் தங்களது பயனாளர் ஐ.டி., மூலம் இணையதள பக்கத்திற்கு சென்று, சீட் ஒதுக்கீட்டின் நிலையை சரிபார்த்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் இன்று 26ம் தேதி முதல் சீட் ஒதுக்கீடு உத்தரவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் இன்று முதல் அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் சீட் ஒதுக்கீடு உத்தரவை கல்லுாரி முதல்வரிடம் சமர்ப்பித்து வரும் 28ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சேர வேண்டும். மாணவர்கள் தகவல் அறிய எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு சென்டாக் உதவி மையத்தை 0413--2655570, 2655571 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!