பங்காரு அடிகளார் அவதார திருநாள் விழா

கடலுார்: பங்காரு அடிகளார் அவதார திருநாளையொட்டி, குரு போற்றி கோடி அர்ச்சனை நடந்தது.

பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையம் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் பங்காரு அடிகளார் 85வது அவதார திருநாள் விழா நடந்தது.

விழாவையொட்டி, காலை 9:30 மணி முதல் 11:00 மணி வரை குரு போற்றி கோடி அர்ச்சனை நடந்தது. இதில், ஏராளமான செவ்வாடை பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

Advertisement