பேனர் அகற்றியதை கண்டித்து அ.தி.மு.க., சாலை மறியல்

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் அ.தி.மு.க., பேனரை போலீசார் அகற்றியதை கண்டித்து, அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளையொட்டி, பெண்ணாடம் பழைய பஸ் நிலையம், மேற்கு மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க.,வினர் பேனர் வைத்திருந்தனர்.

அனுமதியின்றி பேனர் வைத்ததாக கூறி, நேற்று பகல் 12:00 மணிக்கு பெண் ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கிய ராஜ் தலைமையிலான போலீசார் பேரூராட்சி நிர்வாகம் உதவியுடன் பேனரை அகற்றினர்.

இதையறிந்த, சோழன் நகரைச் சேர்ந்த அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் மணிவாசகம் தலைமையில் சரண்ராஜ், பொன் அழகன் ஆகிய 3 பேர் மட்டுமே சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜை கண்டித்து, பேரூராட்சி அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் பேசி, விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

மறியலால் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement