காப்பர் காயில் திருட்டு: 5 பேர் கைது

திண்டிவனம்: திண்டிவனம் அருகே டிரான்ஸ்பார்மரிலிருந்து காப்பர் காயிலை திருடிய வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அடுத்த கீழ்மலையனுார் கிராமத்தில், மின்துறை சார்பில் புதிய டிரான்ஸ்பார்மர் பொறுத்தும் பணி நடந்து வந்தது. இதற்காக அந்த பகுதியில் வைத்திருந்த புதிய டிரான்ஸ்பார்மரில் இருந்து 100 கிலோ காப்பர் காயில் திருடு போனது.

மின்வாரிய அலுவலகம் சார்பில் அளித்த புகாரின் பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, காப்பர் காயிலை திருடிய புதுச்சேரி, உத்திரவாகினிபேட்டை சங்கர் மகன் கவுதம், 25; செஞ்சியான்மகன் சூர்யா, 25; திண்டிவனம் நத்தமேடு குறவர் காலனி ஏழுமலை மகன் அஜீத், 26; கஜேந்திரன் மகன் பிரகாஷ், 28; பாபு மகன் அஜித், 20; ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement