மாணவர்களுக்கு சான்றிதழ்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஸ்ரீ கணேசா கராத்தே புடோகான் பயிற்சி பள்ளி சார்பில் 27வது ஆண்டு கராத்தே கறுப்பு பட்டயம் மற்றும் பெல்ட் தேர்வு போட்டி நடந்தது.

வெற்றி பெற்றவர்களுக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை வகித்து சான்றிதழ், கேடயம் வழங்கினார். வெங்கடாஜலபதி மெட்ரிக் பள்ளி முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். பயிற்சி பள்ளி நிர்வாகி சென்சாய் கணேசன் வரவேற்றார். கராத்தே கறுப்பு பட்டை மற்றும் வண்ண நிற பட்டய போட்டிகளின் நடுவர்களாக பயிற்சியாளர்கள் செல்வகணேஷ், சந்துரு, ஷாலினி, மோனிஷ் செயல்பட்டனர்.

Advertisement