நிழற்குடை இல்லாமல் மர நிழலில் ஒதுங்கல் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

சாயல்குடி: ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல பகுதியில் இருந்து வரக்கூடிய பஸ்கள் கடலாடி செல்வதற்கு மலட்டாறு முக்கு ரோடு பயன்படுகிறது.
ராமநாதபுரத்தில் இருந்து 65 கி.மீ.,ல் உள்ள சாயல்குடி செல்லும் வழியில் மலட்டாறு முக்கு ரோடு உள்ளது.
மலட்டாறு முக்கு ரோட்டில் இருந்து கடலாடி, முதுகுளத்துார், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மற்றும் ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்குரிய பயணிகளும் பெருவாரியாக இங்கு இறங்கி பஸ் ஏறி செல்கின்றனர்.
இங்கு உள்ள பஸ் ஸ்டாப் 200 மீ.,க்கு வலது மற்றும் இடது பகுதியில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வளவு துாரம் நடந்து சென்று பஸ் ஏறுவது இயலாத காரியமாகவே பயணிகளிடம் உள்ளது. பயணிகள் கூறியதாவது:
தொலை துாரங்களுக்கு செல்லக்கூடிய பஸ்களுக்கு இங்குள்ள மலட்டாறு பஸ் ஸ்டாப்பில் ஏறி செல்வதற்கு பயனுள்ளதாக உள்ளது.
பஸ் நிற்கக்கூடிய இடத்தில் வெயில் அதிகளவு அடிக்கிறது. மழை பெய்தால் நனையும் நிலை உள்ளது. எனவே தற்காலிக கூரை ஷெட் அமைத்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
ஏற்கனவே எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட இரண்டு பயணியர் நிழற்குடை வெகு தொலைவில் உள்ளதால் அங்கு பஸ் நிற்பதற்கு வாய்ப்பு இல்லை.
பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கான சமுதாய கழிப்பறை வளாகம் இதுவரை கட்டப்படாததால் திறந்த வெளியை நாடுகின்றனர்.
எனவே கடலாடி யூனியன் நிர்வாகம் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும் என்றனர்.
மேலும்
-
பணத்தாசை கொண்ட பண்ணையார்களை அரசியலில் இருந்து அகற்றுவோம்: விஜய்
-
இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!