வயல்வெளிகளுக்கு தீ வைப்பதால் ஆபத்து

காற்று மாசால் மக்கள் அவதி

பரமக்குடி: பரமக்குடி மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் வயல்களுக்கு தீ வைக்கும் சூழலில் காற்று மாசால் மக்கள் அவதிப்படும் நிலையில் வயல்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயம் பல லட்சம் ஏக்கரில் உள்ளது. தொடர்ந்து கரும்பு, பருத்தி, மிளகாய், சிறுதானியங்கள் சாகுபடி செய்கின்றனர்.

இதன்படி நெல் வயல்களில் சரியாக விளைச்சல் இல்லாத போதும் மற்றும் வயல்களில் தேங்கியுள்ள வைக்கோலை அகற்றும் வகையிலும் சிலர் தீ வைக்கின்றனர்.

மேலும் இது போன்ற செயலில் கரும்பு விவசாயிகள் அதிகம் ஈடுபடும் நிலை உள்ளது.

தொடர்ந்து விவசாய நிலங்களுக்கு தீ வைப்பதால் அருகில் உள்ள குடியிருப்புகள் அல்லது மற்ற வளர்ந்த மரங்களுக்கு பாதிப்பு உண்டாகிறது.

அதிக புகையால் ரோட்டோரம் செல்லும் வாகன ஓட்டிகள், அருகில் குடியிருக்கும் மக்கள் மூச்சு திணறலுக்கு ஆளாகின்றனர்.

மேலும் நிலங்களில் பல்லுயிர் சூழல் அழிக்கப்படுகிறது.

விவசாயிகள் எக்காரணத்தைக் கொண்டும் வயல்களுக்கு தீ வைப்பதை தவிர்க்க வேண்டும் என வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement