கஞ்சாவுடன் ஒருவர் கைது

தொண்டி: தொண்டி எஸ்ஐ., கோவிந்தன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

தொண்டி அருகே எம்.ஆர்.பட்டினம் கடற்கரையில் பையுடன் நின்றவரை சோதனை செய்த போது கஞ்சா இருந்தது.

அவர் தஞ்சாவூர் மாவட்டம் சேதுவா சத்திரம் காரக்குடியை சேர்ந்த ராஜா 27, என தெரிந்தது. அவரை கைது செய்து 1 கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement