விடுமுறை அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: -விஸ்வகர்மா ஜெயந்தியான செப்.,17ல் அரசு விடுமுறை அறிவிக்க கோரி விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவையினர் ராமநாதபுரம் புறநகர் போக்குவரத்து பணிமனை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தென் மண்டல செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். நிர்வாகி வேம்புராஜன் வரவேற்றார்.

மாநில பொதுச்செயலாளர் மகேஸ்வரன், மாநிலத்தலைவர் அய்யப்பன், முன்னாள் மாநிலத்தலைவர் ஏ.முனியசாமி, பொருளாளர் மீனாட்சிசுந்தரம், உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

விஸ்வகர்மா சமுதாயத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் உள் ஒதுக்கீடாக 5 சதவீதம் வழங்க வேண்டும்.

ஜாதி சான்றிதழில் ஹிந்து விஸ்வகர்மா என வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

Advertisement