ஆர்ப்பாட்டம்

சாத்துார்: சாத்துார் பி.டி.ஓ. அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட குழு உறுப்பினர் முனியராஜ் தலைமை வகித்தார்.மாவட்ட பொருளாளர் மனோஜ் குமார் பேசினார்.100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் உடனடியாக சம்பளம் வழங்கிட வேண்டும்.மணல் அள்ளும் இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

Advertisement