மஹா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு: 45 நாட்களில் 65 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்; உ.பி., முதல்வர் தகவல்

10

லக்னோ: மஹா கும்பமேளா நிகழ்ச்சியில் மொத்தம் 45 நாட்களில், 66 கோடியே 21 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


@1brதிரிவேணி சங்கமத்தில் ஜன.13ம் தேதி தொடங்கிய மஹா கும்பமேளா இன்று (பிப்.26) நிறைவு பெறுகிறது. இதுவரை 66 கோடிக்கும் அதிகமானோர் கும்பமேளாவில் கலந்து கொண்டு நீராடி இருக்கின்றனர்.

இது தொடர்பாக இன்று யோகி ஆதித்யநாத் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடி வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட சமத்துவத்தின் மாபெரும் திருவிழா, மஹா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.


பிரயாக்ராஜில் ஜனவரி 13ம் தேதி துவங்கி, மகாசிவராத்திரி நாளான இன்று (பிப்.,26) வரை, மொத்தம் 45 நாட்களில், 66 கோடியே 21 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர். இது உலக வரலாற்றிலேயே முக்கியமானது.


கும்பமேளா நிகழ்ச்சி தெய்வீகமாகவும், மகத்தானதாகவும் மாறி உலகம் முழுவதும் ஒற்றுமையை எடுத்துரைக்கிறது. இந்த சாதனைக்கு காரணமான அனைத்து மக்களுக்கும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவிக்கிறேன்.


உள்ளாட்சி நிர்வாகம், போலீசார், துப்புரவுப் பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்றி. அன்னை கங்கை, கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். இவ்வாறு உ.பி., முதல்வர் தெரிவித்துள்ளார்.

Advertisement