அறிவும் ஆற்றலும் கொண்ட மாணவர்களை உருவாக்கும் அல்கெமி

பி.பி.ஜி., கல்வி குழுமத்தின் அங்கமாக, நிறுவன தலைவர் தங்கவேலு வழிகாட்டலில், சரவணம்பட்டியில் அல்கெமி பப்ளிக் பள்ளி இயங்கி வருகிறது. 2012ம் ஆண்டு துவங்கிய இப்பள்ளி, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
அனுபவக் கற்றலை வளர்க்கும் விதமாக, மழலையர் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரை க்ரீடோ பாடத் திட்டத்தில் கற்பிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வில் நுாறு சதவிகித தேர்ச்சியும், நல்ல மதிப்பெண்களையும் பெற்று சிறந்த பள்ளியாகத் திகழ்கிறது.
தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களுக்கு மொழி ஆய்வுக்கூடங்களும், கணினி, வேதியியல், இயற்பியல், உயிரியல் பாடங்களுக்கு தனித்தனியே சிறப்பான உள் கட்டமைப்பு வசதியோடும் ஆய்வுக்கூடங்கள் உள்ளது.
எதிர்காலத் தேவைக்கேற்ப கணினி மற்றும் ஏ.ஐ.,ரோபோடிக்ஸ் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. வகுப்பறைகள், நுாலகம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவை நவீன வசதிகளோடு மேம்படுத்தப்பட்டுள்ளன.
கால்பந்து, கூடைப்பந்து, எறிபந்து, ஹாக்கி, கைப்பந்து, போன்ற விளையாட்டுகளுக்கு சிறப்பு பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது.
பாரம்பரிய கலைகளான பரதநாட்டியம், சிலம்பம், இசை மற்றும் மேற்கத்திய நடனம் போன்ற கலைகள் முழு நேர ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கப்படுகின்றது. புதிய கல்வியாண்டு முன்னிட்டு, தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும்
-
மாணவிக்கு டார்ச்சர் வாலிபர் மீது போக்சோ
-
ரூ.3.50 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல் ரூ.1 கோடியில் வீடு கட்டிய புரோக்கருக்கு வலை
-
நீலகிரியில் டைப்ரைட்டிங் தேர்வு மையம் டி.என்.பாளையம் மாணவியர் முறையீடு
-
அடுத்த ஆண்டு இ.பி.எஸ்., முதல்வர் அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு
-
மேட்டூர் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு
-
இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி வழக்கு விசாரணை அதிகாரி மாற்றம்