ஜூனியர் பெண்கள் ஹாக்கி 'லீக்' சென்னை அணி கோல் மழை

சென்னை, பிப். 27-
ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், 'அஸ்மிதா' என்ற தலைப்பில், மாநில அளவில் ஜூனியர் பெண்களுக்கான ஹாக்கி போட்டி, எழும்பூர், ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடக்கிறது.
போட்டியில், சென்னை, கடலுார், மதுரை, சேலம், சிவகங்கை, திருச்சி, திருப்பூர் மற்றும் திருவள்ளூர் என, எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. அணிகள் 'ஏ' மற்றும் 'பி' என, இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, 'லீக்' முறையில் மோதி வருகின்றன.
நேற்று காலை நடந்த, 'ஏ' பிரிவினருக்கான போட்டியில், சென்னை மற்றும் மதுரை அணிகள் எதிர்கொண்டன. இதில், துவக்கத்தில் இருந்தே சென்னை அணி, துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
முடிவில், 7 - 0 என்ற கோல் கணக்கில், சென்னை அணி வெற்றி பெற்றது.
அந்த அணியின் பிரின்சியா அக்னேஷ் இரண்டு கோல்கள், அபிநயா, பவித்ரா, நந்தினி, சுபலட்சுமி மற்றும் ஜோதிலட்சுமி ஆகியோர், அடுத்தடுத்த நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
அதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில், சேலம் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில், கடலுார் அணியை தோற்கடித்தது.
மேலும்
-
மாணவிக்கு டார்ச்சர் வாலிபர் மீது போக்சோ
-
ரூ.3.50 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல் ரூ.1 கோடியில் வீடு கட்டிய புரோக்கருக்கு வலை
-
நீலகிரியில் டைப்ரைட்டிங் தேர்வு மையம் டி.என்.பாளையம் மாணவியர் முறையீடு
-
அடுத்த ஆண்டு இ.பி.எஸ்., முதல்வர் அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு
-
மேட்டூர் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு
-
இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி வழக்கு விசாரணை அதிகாரி மாற்றம்