புகார் பெட்டி: பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி வேதநாராயணபுரத்தில் தவிப்பு

பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி வேதநாராயணபுரத்தில் தவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், ஆலப்பாக்கம் ஊராட்சியில், வேதநாராயணபுரத்தில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வந்தனர்.

இந்த தொட்டி இடிந்து விழும் நிலையில் இருந்ததால், புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என, ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் குறைதீர்க்கும் கூட்டங்களில், மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, 2022-23ம் நிதியாண்டில், 15வது மானிய நிதி 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30,000 லிட்டர் கொள்ளளவு உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன் பின், நீர்த்தேக்க தொட்டி கட்ட 'டெண்டர்' விடப்பட்டு, கட்டுமானப் பணிகள் முழுதாக முடிந்துள்ளன. தற்போது, நீர்த்தேக்க தொட்டி தயார் நிலையில் உள்ளது. இதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

- பி.கீர்த்தனா, செங்கல்பட்டு.

Advertisement