ரஞ்சி: விதர்பா அணி அபாரம்

நாக்பூர்: கேரளாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை பைனலில் விதர்பா அணியின் டேனிஸ் மாலேவார் சதம் விளாசினார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் பைனல் நடக்கிறது. இதில் கேரளா, விதர்பா அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்ற கேரளா அணி கேப்டன் சச்சின் பேபி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
விதர்பா அணிக்கு பார்த் (0), தர்ஷன் (1) ஏமாற்றினர். துருவ் ஷோரே (16) நிலைக்கவில்லை. பின் இணைந்த டேனிஷ் மாலேவார், கருண் நாயர் ஜோடி நம்பிக்கை தந்தது. ஆதித்யா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டேனிஸ், முதல் தர போட்டியில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த கருண் நாயர் அரைசதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 215 ரன் சேர்த்த போது கருண் நாயர் (86) 'ரன்-அவுட்' ஆனார்.
ஆட்டநேர முடிவில் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 254 ரன் எடுத்திருந்தது. டேனிஷ் (138), யாஷ் தாக்கூர் (5) அவுட்டாகாமல் இருந்தனர். கேரளா அணி சார்பில் நிதிஷ் 2 விக்கெட் கைப்பற்றினார்.
நடப்பு ரஞ்சி கோப்பை சீசனில் 700 ரன்னை கடந்த 2வது விதர்பா அணி வீரரானார் கருண் நாயர். இதுவரை 9 போட்டியில், 3 சதம், 2 அரைசதம் உட்பட 728 ரன் குவித்துள்ளார். ஏற்கனவே யாஷ் ரத்தோட் (933 ரன், 10 போட்டி, 5 சதம், 3 அரைசதம்) இந்த இலக்கை கடந்தார்.
மேலும்
-
வெப்பவாத சிகிச்சை அளிக்க தயார்
-
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முன்னேற்பாடு பணிகள்
-
ரூ.41.5 கோடி கொடுத்தால் 'கோல்டு கார்டு' அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
'ரூ.3.50 லட்சம் கோடி கடன் தான் தி.மு.க.,வின் சாதனை'
-
அறிஞர் அண்ணா கலைக்கல்லுாரியில்வணிகவியல் துறை பயிற்சி பட்டறை
-
கொலை, பாலியல் பலாத்காரம் அதிகரிப்புதி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்