கொலை, பாலியல் பலாத்காரம் அதிகரிப்புதி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கொலை, பாலியல் பலாத்காரம் அதிகரிப்புதி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், புரட்சி பாரதம் கட்சியின் சார்பில், தி.மு.க., அரசு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.
தொழிற்சங்க பிரிவு மாநில செயலாளர் குமார் பேசியதாவது: தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், ஆணவ படுகொலை, பாலியல் சீண்டல்கள், போதை பொருள் விற்பனை தொடர்ந்து நடக்கிறது. சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. குறிப்பாக பட்டியலின மக்கள், தி.மு.க., ஆட்சியில் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். ஆணவ படுகொலைக்கான, தடுப்பு சட்டத்தை இந்த அரசு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். வேங்கை வயல் வழக்கை இந்த சமூக நீதி அரசு, சி.பி.ஐ.,க்கு மாற்ற, உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து, கோஷங்கள் எழுப்பப்பட்டன. புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர்கள் அனுமந்தன், தியாகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
குகைக்குள் 'டிரெக்கிங்': ஒடிசா அரசு அறிமுகம்
-
மாணவிக்கு டார்ச்சர் வாலிபர் மீது போக்சோ
-
ரூ.3.50 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல் ரூ.1 கோடியில் வீடு கட்டிய புரோக்கருக்கு வலை
-
நீலகிரியில் டைப்ரைட்டிங் தேர்வு மையம் டி.என்.பாளையம் மாணவியர் முறையீடு
-
அடுத்த ஆண்டு இ.பி.எஸ்., முதல்வர் அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு
-
மேட்டூர் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு