அறிஞர் அண்ணா கலைக்கல்லுாரியில்வணிகவியல் துறை பயிற்சி பட்டறை


அறிஞர் அண்ணா கலைக்கல்லுாரியில்வணிகவியல் துறை பயிற்சி பட்டறை


கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியிலுள்ள அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல் மற்றும் வணிக மேலாண்மையியல் துறைகளின் சார்பில், ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. வணிக கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் ஜெகன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் தனபால் தலைமை வகித்தார்.
திருச்செங்கோடு விவேகானந்தா கல்லுாரி வணிகவியல் துறைத்தலைவர் குமரேசன் பேசுகையில், ''புள்ளியியல் வல்லுனர்கள் சோதனைகளை வடிவமைத்து, மதிப்பீடுகள் மூலம், தரவுகளின் தரத்தை மேம்படுத்துகிறார்கள்.
தரவுகள் மற்றும் புள்ளியியல் எடுத்துக்காட்டுகளை பயன்படுத்தி, எதிர்கால விளைவுகளை கணிக்கவும், எதிர்காலத்தை பகுப்பாய்வு செய்யவும் வணிகத்தில் புள்ளியியல் ஒரு கருவியாக பயன்படுகிறது,'' என்றார்.
வணிகவியல் துறைத்தலைவர் குமரேசன், ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, பயிற்சி பட்டறைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பயிற்சி பட்டறையில் கல்லுாரியின் அகத்தர மதிப்பீட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி பங்கேற்றார்.
பயிற்சி பட்டறையில், கிருஷ்ணகிரி, நாமக்கல், ஓசூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வணிக மேலாண்மையியல் துறைத்தலைவர் வெங்கடேஷ் குமார் நன்றி கூறினார்.---

Advertisement