பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முன்னேற்பாடு பணிகள்
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முன்னேற்பாடு பணிகள்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகள் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் தலைமை வகித்து பேசியதாவது:
மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் வரும் மார்ச், 3-ல், துவங்கி 25- வரையிலும், பிளஸ் 1 தேர்வுகள் வரும் மார்ச், 5- முதல், 27 வரையிலும், நடக்கிறது. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில், 51 மையங்களிலும், ஓசூர் கல்வி மாவட்டத்தில், 36 மையங்கள் என மொத்தம், 87 மையங்களில் நடக்கிறது.
பிளஸ் 1 தேர்வை, 22,627 மாணவ, மாணவியர், 274 மாற்றுத்திறன் மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ் 2 வகுப்பு தேர்வை, 21,949 மாணவ, மாணவியர் மற்றும் 231 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்களுக்கு சிறப்பு பறக்கும்படைகள் மற்றும் பஸ் வசதிகள், அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அந்தந்த துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.ஓசூர் துணை சப் கலெக்டர் பிரியங்கா, மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
குகைக்குள் 'டிரெக்கிங்': ஒடிசா அரசு அறிமுகம்
-
மாணவிக்கு டார்ச்சர் வாலிபர் மீது போக்சோ
-
ரூ.3.50 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல் ரூ.1 கோடியில் வீடு கட்டிய புரோக்கருக்கு வலை
-
நீலகிரியில் டைப்ரைட்டிங் தேர்வு மையம் டி.என்.பாளையம் மாணவியர் முறையீடு
-
அடுத்த ஆண்டு இ.பி.எஸ்., முதல்வர் அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு
-
மேட்டூர் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு