'ரூ.3.50 லட்சம் கோடி கடன் தான் தி.மு.க.,வின் சாதனை'
'ரூ.3.50 லட்சம் கோடி கடன் தான் தி.மு.க.,வின் சாதனை'
கிருஷ்ணகிரி:''தி.மு.க., அரசு நான்காண்டு ஆட்சியில், 3.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியது மட்டும் தான் சாதனை,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசினார்.
கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் நேற்று, அ.தி.மு.க., சார்பில், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த, ஜெயலலிதாவின், 77வது பிறந்த நாள் விழாவில், பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியதாவது: தமிழகத்தில், சட்டம், ஒழுங்கு கடுமையாக பாதித்துள்ளது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. இ.பி.எஸ்., ஒரே ஆண்டில், 11 மருத்துவ கல்லுாரியை கொண்டு வந்தார். தி.மு.க., அரசு, 4 ஆண்டில், மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியதுதான் சாதனை. துணை முதல்வர் உதயநிதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரை பார்த்து, 'கெட் அவுட் மோடி' என்கிறார். இப்படியே பேசிக் கொண்டிருந்தால், உள்ளே வைத்து விடுவார்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சக்கர பெட்ரோல் வண்டிகள், 16 பேருக்கு தையல் இயந்திரங்கள், 17 பேருக்கு சலவை பெட்டி, 70 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை ஆகியவை வழங்கப்பட்டன.
விழாவில், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், நகர செயலாளர் கேசவன், ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், பையூர் ரவி, சைலேஷ் கிருஷ்ணன், தலைமை கழக பேச்சாளர் விஜயாதைலான், இளைஞரணி செயலாளர் கார்த்திக் பால்ராஜ், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
குகைக்குள் 'டிரெக்கிங்': ஒடிசா அரசு அறிமுகம்
-
மாணவிக்கு டார்ச்சர் வாலிபர் மீது போக்சோ
-
ரூ.3.50 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல் ரூ.1 கோடியில் வீடு கட்டிய புரோக்கருக்கு வலை
-
நீலகிரியில் டைப்ரைட்டிங் தேர்வு மையம் டி.என்.பாளையம் மாணவியர் முறையீடு
-
அடுத்த ஆண்டு இ.பி.எஸ்., முதல்வர் அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு
-
மேட்டூர் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு