சென்னையில் 'தல' தோனி

சென்னை: ஐ.பி.எல்., தொடருக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க சென்னை அணியின் தோனி, கேப்டன் ருதுராஜ் உள்ளிட்டோர் நேற்று சென்னை வந்தனர்.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 18வது சீசன் வரும் மார்ச் 22ல் கோல்கட்டாவில் துவங்குகிறது. பைனல், மே 25ல் கோல்கட்டாவில் நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் 'மெகா' ஏலம் சமீபத்தில் நடந்தது. ஐந்து முறை கோப்பை வென்ற சென்னை அணியில் தோனி, கேப்டன் ருதுராஜ் உள்ளிட்டோர் தக்கவைக்கப்பட்டனர்.
சென்னை அணி தனது முதல் லீக் போட்டியில் (மார்ச் 23, சென்னை) மும்பை அணியை சந்திக்கிறது. இத்தொடருக்கான சென்னை அணியினரின் பயிற்சி முகாம் சென்னையில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முன்னாள் கேப்டன் தோனி நேற்று சென்னை வந்தார். இவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதேபோல கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், வேகப்பந்துவீச்சாளர் குர்ஜப்னீத் சிங், ஆன்ட்ரி சித்தார்த் நேற்று சென்னை வந்தனர். இளம் வேகப்பந்துவீச்சாளர்களான கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், கமலேஷ் நாகர்கோடி ஏற்கனவே சென்னை அணியினரின் பயிற்சி முகாமில் இணைந்தனர்.
மேலும்
-
சஸ்பெண்ட் உத்தரவு ரத்துகாத்திருப்பு போராட்டம் வாபஸ்
-
'2026ல் இ.பி.எஸ்., ஆட்சி வரும் என்றஒரே குறிக்கோளுடன் செயல்படணும்
-
எக்ஸல் வணிகவியல் கல்லுாரியில்ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
-
எருமப்பட்டி யூனியனில் 15 நாளில்982.640 மெ.டன் நெல் கொள்முதல்
-
ஞானமணி தொழில்நுட்ப கல்லுாரிஐ.டி., நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
-
ரூ.7 லட்சத்திற்குபருத்தி வர்த்தகம்