வங்கதேசத்திற்கு ஆபத்து: ராணுவ தளபதி எச்சரிக்கை

3


டாகா: வங்கதேசத்தில் சமூகத்தினர் இடையே நடக்கும் மோதல் காரணமாக இறையாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது என அந்நாட்டு ராணுவ தளபதி வாகர் உஜ் ஜமான் கூறியுள்ளார்.


இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது: நாம் உருவாக்கிய அராஜகத்தினை இன்று நாம் பார்த்து வருகிறோம். அதிகாரிகள் வழக்குகளில் சிக்கி உள்ளதால், இளைய அதிகாரிகள் முதல் மூத்த அதிகாரிகள் வரை பயப்படுகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதால், ஆயுதப்படைகளுக்கு இன்னும் கடமை அதிகரித்து உள்ளது.


உடனடியாக மக்கள் ஒற்றுமையுடனும், நிறுவனங்கள் கட்டுப்பாட்டுடனும் பணியாற்ற வேண்டும். மக்கள் இடையே தொடர்ச்சியாக அதிகரித்து வரும் மோதல் காரணமாக நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.


கருத்து வேறுபாட்டை களைய முடியாமல் போனால், தொடர்ச்சியாக உங்களுக்கு உள்ளே சண்டையிட்டு கொண்டு ஒருவரை காயப்படுத்தியும், கொன்றால், நாட்டின் சுதந்திரத்திற்கும், ஒற்றுமைக்கும் ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement