குமாரபாளையத்தில்மக்களுடன் முதல்வர் முகாம்
குமாரபாளையத்தில்மக்களுடன் முதல்வர் முகாம்
குமாரபாளையம்:குமாரபாளையத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடந்தது. ஒன்றிய செயலாளர் நாச்சிமுத்து தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஈரோடு எம்.பி., பிரகாஷ், கலெக்டர் உமா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:மக்களின் முதல்வர் ஸ்டாலின், மக்களுடன் நெருங்கி பழகி வருகிறார். 'அப்பா' என்று அழைப்பதை பெருமையாக கருதி வருகிறார். முன்பெல்லாம் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க, அரசு அலுவலகம் சென்று, அரசு அதிகாரிகளை சந்தித்து மனுக்கள் கொடுப்பது வழக்கம். ஆனால், இப்போது மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் மூலம், மக்கள் இருக்கும் இடம் தேடி வந்து, மக்களிடம் மனுக்கள் பெற்று, அவர்களின் குறைகளை தீர்த்து வருகிறார். அடுத்து வரக்கூடிய சட்டசபை தேர்தலில், 200 தொகுதிக்கும் மேல் வென்று ஆட்சிக்கு வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், தாசில்தார் சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
மாணவிக்கு டார்ச்சர் வாலிபர் மீது போக்சோ
-
ரூ.3.50 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல் ரூ.1 கோடியில் வீடு கட்டிய புரோக்கருக்கு வலை
-
நீலகிரியில் டைப்ரைட்டிங் தேர்வு மையம் டி.என்.பாளையம் மாணவியர் முறையீடு
-
அடுத்த ஆண்டு இ.பி.எஸ்., முதல்வர் அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு
-
மேட்டூர் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு
-
இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி வழக்கு விசாரணை அதிகாரி மாற்றம்